Surprise Me!

#Chennai rain update! | சென்னை மழை நிலவரம்!-Oneindia Tamil

2017-11-03 3 Dailymotion

சென்னை காலை முதல் மழையின்றி வானம் தெளிவாகக் காணப்படுகிறது. ஆனால் இன்றும் இடியுடன் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று காலையில் இருந்து சுள்ளென வெயில் காய்ந்தது. மழை பெய்த சுவடே தெரியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. ஆனால் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது.வானிலை மைய கணிப்புகளையும் தாண்டி பலத்த மழை கொட்டியது. இதனால் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. போக்கு வரத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.

No rain in chennai from morning. sometimes its hot sun in some places of Chennai.