அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ரெயான் போர்ப்ஸ் பட்டியலில் 2017ம் ஆண்டில் யூடியூப்பில் அதிக வருமானம் பெறுபவராக கண்டறியப்பட்டுள்ளார். புதுப்புது முயற்சிகளை செய்து இணையதளத்தில் வீடியோவாக பதிவு செய்பவர்களுக்கு யூடியூப் தனி பிளாட்பார்ம் உருவாக்கித் தருகிறது. நீங்கள் பதிவிடும் வீடியோ பலரது விருப்பமாக இருந்தால் உடனடியாக யூடியூப் உங்களைத் தொடர்பு கொண்டு தனி சேனலாக அதனை உருவாக்கச் சொல்லி உங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி, விளம்பரம் என அனைத்து உதவியும் செய்யும். 2017ம் ஆண்டில் யூடியூப் சேனல்கள் மிகப் பிரபலமானதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். முதலீடு வேண்டாம், பெரும் பொருட்செலவு வேண்டாம், வித்தியாசமான சிந்தனை அதிக பார்வையாளர்கள் இருந்தால் போதும் நீங்க ஜெயித்து விடலாம்.
அப்படித் தான் இந்த 6 வயது சிறுவன் ரெயானும். பொதுவாக குழந்தைகள் என்றாலே பொம்மைகளுடன் விளையாடப் பிரியப்படுவார்கள். அதையே தான் இந்த ரெயானும் செய்துள்ளார்.
ஆனால் குடும்பத்தினரின் உதவியுடன் விளையாட்டு பொருட்களை வைத்து எப்படி விளையாடுவது என்று விளக்கத்தோடு செய்து காட்டுவது தான் ரெயானின் ஸ்பெஷல். சொல்லப்போனால் ஒரு சினிமா பார்த்துவிட்டு படம் நல்ல இருக்கா இல்லையா என்று விமர்சனம் சொல்வர்கள் இல்லையா அதைப் போலத் தான் இதுவும் ஒரு வகை ரிவ்யூ.
Toys Review for kids by a 6 years old kid turns him as a millionare, he is made it into the global list of Forbes’ “Highest-Paid YouTube Stars 2017”