கடந்த சனிக்கிழமையன்று ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கிங்குயான் நகரில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்தின் உள்ளே இருந்தவர்கள் மேற்கூரையின் பக்கவாட்டுப் பகுதி உடைந்து அதன் வழியாக சாலையில் விழுந்தனர். விழுந்த வேகத்தில் துள்ளிய பேருந்து அவர்களை அப்படியே நசுக்கியபடி சறுக்கி சென்றது. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். அதற்குப் பின்னால் வந்த நீண்ட லாரி ஒன்று, சுதாரித்து நின்றதால், மேலும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV