மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மவட்ட மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் ஒரே ஊசியை செவிலியர் பயன்படுத்தியதாக தெரிகிறது. ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தக் கூடாது என்ற நடைமுறை இருந்தும், செவிலியர் அதை மீறி அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை பயன்படுத்தி மருந்து செலுத்தியுள்ளார். இதனால் ஊசி போட்டவர்களில் பலர் மயங்கி விழுந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊசி போட்ட செவிலியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்