எழுத்தாளர் பா. ராகவனுடனான தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல். வெகுஜனப் பத்திரிகை உலகில் தமது தடங்களை அழுத்தமாகப் பதித்து வந்த பாரா தமிழ் இலக்கிய உலகிலும் இதுவரை நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகள் வாயிலாக தமது அடையாளத்தை வெகு ரசனையுடன் பதிவு செய்து வந்திருக்கிறார். சின்னத்திரையிலும் கெட்டிமேளம், வாணி, ராணி என இவரது பங்களிப்பு தொடர்கிறது. ஒரு மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், சின்னத்திரை, பெரிய திரை வசனகர்த்தா என ஊடகப் பரப்பில் பயணித்துக் கொண்டிருக்கும் எல்லைகள் எங்கெங்கு வியாபித்துக் கிளைத்துக் கொண்டே செல்கின்றன. அவருடனான நேர்காணல் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. 
முழுமையான நேர்காணல் வெள்ளியன்று வெளியாகும்.
விருந்தினர்: எழுத்தாளர் பா.ராகவன் | Pa.Raghavan 
சந்திப்பு: பத்திரிகையாளர் கார்த்திகா வாசுதேவன் | Journalist Karthiga Vasudevan
ஒளிப்பதிவு: விஜயாலயன்
தொகுப்பு: நவீன்குமார் மனோகரன்
ஒருங்கிணைப்பு: ஆர். பார்த்தசாரதி, உமா பார்வதி