ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களை முற்றிலும் மறுத்து அதற்கு விளக்கமளித்துள்ளது உள்துறை அமைச்சகம்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுவரை 4,337 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் சுமார் 83,004 பேர் தற்போது சிகிச்சையில் இருக்கும் நிலையில் 64,425 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டது முதல் அதாவது மார்ச் 21-ம் தேதி முதல் தற்போது வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு ஊரடங்கு நிறைவு பெறும்போதும் புதிய தளர்வுகளுடன் அடுத்தகட்ட ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு.
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India