Surprise Me!

#BOOMINEWS | கரூரில் ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் மத நல்லிணக்க நாள் உறுதி மொழி |

2021-08-19 1 Dailymotion

கரூரில் ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் மத நல்லிணக்க நாள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதி மேற்கொள்ளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது ஆட்சியர் பிரபுசங்கர் மத உணர்வோடு செயல்படாமல் மத நல்லிணக்கத்தோடு செயல்படுவோம் எனவும் நமக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பேசி முடிவு எடுத்துக் கொள்வோம் என மத நல்லிணக்க நாள் உறுதி மொழியை வாசிக்க தொடர்ந்து அலுவலர்கள், பணியாளர்கள் அந்த உறுதிமொழியை வாசித்து ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில், ஏராளமான அரசுத் துறை அலுவலர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்