மக்கள் மீது கொண்ட அக்கறையை விட எந்த சக்தியும் பெரியதல்ல. சமூக அக்கறையோடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்பட்டதனால் வெள்ளம் தானே கொஞ்சம் வடிந்தது. தடிகொண்டு அடித்ததிலும் கொஞ்சம் வடிந்தது.
- வைரமுத்து பேட்டி
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் உணவு பொருட்களை வழங்கினர். வைரமுத்து பேட்டி :- தலைவன் எவ்வழி அரசு அவ்வழி அமைச்சர் முன் நடந்தார் அதிகாரிகள் பின் நடந்தார்கள் அதிகாரிகள் பணியாற்றினார்கள். ஒரு அரசன் தூங்காமல் இருக்கும் போது அமைச்சர்களும் தூங்க மாட்டார்கள். தளபதி தூங்காமல் செயலாற்றிய போது அமைச்சர்களும் அவருக்கு இணையாக ஓடிவந்தார்கள். தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை துடைப்பதற்க்கு அதிகாரம் முக்கியமல்ல,அரசு எந்திரம் முக்கியமல்ல,மக்கள் மீது கொண்ட அக்கறை தான் முக்கியம். மக்கள் மீது கொண்ட அக்கறையை விட எந்த சக்தியும் பெரியதல்ல. சமூக அக்கறையோடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்பட்டதனால் வெள்ளம் தானே கொஞ்சம் வடிந்தது. நாங்கள் தடிகொண்டு அடித்ததிலும் கொஞ்சம் வடிந்தது. வெள்ளம் தானே வடிந்தது. தடிகொண்டு அடித்ததிலும் வடிந்தது. | #VairamuthuPressmeet #VairamuthuLatestSpeech #mkstalin #tnfloods #chennaifloods