Surprise Me!

#Templevision24 #Tv24 #கோவை #பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி |

2021-12-20 6 Dailymotion

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நடராஜ பெருமானை வணங்கி பரவசமடைந்தனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தொடர்ந்து 9 நாட்கள் காலை மாலை வேளைகளில் திருவெம்பாவை உற்சவம், மாணிக்க வாசகர் வீதி உலா, கிளி வாகன சேவை மற்றும் சோமாஸ்கந்தர் திருவீதி உலா உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அருள்மிகு நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து அருள்மிகு நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு சிறப்பாக காட்சி அளிக்கவே இரவு முதலே இந்த காட்சிக்காக காத்திருந்த ஏராளமான பக்தர்கள் எம்பெருமானை பக்தி பரவசத்துடன் துதித்து சென்றனர்.