Surprise Me!

பழனியில் ரூ. 4 கோடி உண்டியல் காணிக்கை

2025-12-20 3 Dailymotion

திண்டுக்கல்: பழனி மலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூன்றாம் படை வீடாகும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிதனம் செய்து வருகின்றனர்.

இங்கு வருகிற பக்தர்கள் தங்கள் காணிக்கையை உண்டியலில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு உண்டியலில் செலுத்தும் காணிக்கையானது ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். தற்போது  உண்டியல் நிரம்பியதால் இரண்டு நாள் முன் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது 4 கோடியே 8 லட்சத்தி 43 ஆயிரத்து 113 ரூபாய் இருந்தது. இதில் தங்கம் 800 கிராம், வெள்ளி 11,275 கிராம், வெளிநாட்டு கரன்சி 574 ஆகியவை அடங்கும். உண்டியல் எண்ணும் பணியில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.