Surprise Me!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.3.39 கோடி காணிக்கை

2026-01-10 3 Dailymotion

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் 3.39 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டதிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியன் சாமி திருக்கோயில். பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.

மேலும், சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயிலுக்குள் இருக்கும் உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை செலுத்துவார்கள். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் பொருட்கள் மாதந்தோறும் எண்ணப்படும். டிசம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில் நடந்தது.  

இதில் உண்டியல்களில் இருந்து 3 கோடியே 39 லட்சத்து 56 ஆயிரத்து 353 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 724 கிராம் தங்கமும், 26,340 கிராம் வெள்ளியும், 1,408 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.