மேதினம் பிறந்தது
மக்களின் குருதியில்
உழைக்கும் வர்க்கத்தின் குருதியில்
எட்டுமணி நேர வேலைக்காக
எத்தனை எத்தனை பேர் இறந்தார்
அவர் கொட்டிய இரத்தம்
அவர்க்கொரு புதிய சக்தியை தந்தது
புதிய சக்தியைத் தந்தது
சிக்காகோ மாநகர் சாலைகளே
சரித்திரம் படைத்த
சிவந்த சுவடுகளே
தொடர்ந்திடும் இந்த
சரித்திரம் என்று
அவரிடம் சொல்லுங்கள்
சுரண்டும் அவரிடம் சொல்லுங்கள்
யாழ்நகர் செம்மண் தோட்டத்திலே
பாடுபட்டுழைக்கும் பாமரரே
தேடிடும் வாழ்வு
போரிலே கிடைக்கும்
சரித்திரம் தொடரட்டும்
மேதின சரித்திரம் தொடரட்டும்
வலியவர் பூட்டிய
விலங்கினை உடைக்க
எழுந்து வாருங்கள் தோழர்களே- இனி
பாமர ஜாதிகள் பாரினை ஆளும்
சரித்திரம் தொடரட்டும்
மேதின சரித்திரம் தொடரட்டும்.